இந்தியா பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகால ஆட்சியை ஆளும் பா.ஜ.க இம்முறையும் நீடித்துள்ளது…

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக ஆளும் பா.ஜ.க இம்முறையும் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், தொடர்ந்து 6-வது முறையாக அம்மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியமைக்க உள்ளது.

குஜராத் மாநில சட்டசபைக்கு கடந்த 9 மற்றும் 14-ம்திகதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடந்தது. இரண்டு கட்ட தேர்தலையும் சேர்த்து சராசரியாக 68.41 சதவீத வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் இன்று திங்கட்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியிருநி;தது.

குஜராத் மாநிலத்தில் கடந்த 22 ஆண்டுகளாக பா.ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. 1990-ம் ஆண்டு ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்ததையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் குஜராத்தில் பா.ஜனதா கட்சி 27 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.

1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. குஜராத்தின் தன்னி கரற்ற தனிப்பெரும்பான்மை பலம் மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. 1995, 1998, 2002, 2007 மற்றும் 2012-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் தொடர்ச்சியாக பா.ஜ.க. 5 தடவை வென்று ஆட்சி அமைத்திருந்தது.

000000000000000

1.45குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 25 தொகுதிகளில், பாஜக 13 தொகுதிகளையும், காங்கிரஸ் 11 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

1.45இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 6 தொகுதிகளில், பாஜக 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 2 தொகுதியையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 தொகுதியையும் வென்றுள்ளன.

1.30குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 18 தொகுதிகளில், பாஜக 10 தொகுதிகளையும், காங்கிரஸ் 7 தொகுதிகளையும், தேசியவாத காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

1.30இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 4 தொகுதிகளில், பாஜக 3 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

இந்த வெற்றி உண்மையிலே மகிழ்ச்சி தருகிறதா?: மோதிக்கு பிரகாஷ் ராஜ் கேள்வி

ஜிக்னேஷ் மேவானி முன்னிலை!

1: 20குஜராத் மாநிலம் வடகம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட இளம் தலித் தலைவர் ஜிக்னேஷ்குமார் நட்வர்லால் மேவானி ஏறத்தாழ 22 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

படத்தின் காப்புரிமைJIGNESH MEVANI

1.15: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 11 தொகுதிகளில், பாஜக 7 தொகுதிகளையும், காங்கிரஸ் 4 தொகுதிகளையும் வென்றுள்ளன.

1.15: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளில், பாஜக 2 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

12.40: குஜராத் மாநில சட்டப்பேரவை முடிவுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 5 தொகுதிகளில், பாஜக 4 தொகுதிகளையும், காங்கிரஸ் 1 தொகுதியையும் வென்றுள்ளன.

குஜராத் மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 7 94 101
இந்திய தேசிய காங்கிரஸ் 4 71 75
தேசியவாத காங்கிரஸ் கட்சி 0 1 1
பாரதிய பழங்குடி கட்சி 0 2 2
சுயேச்சை 0 3 3
மொத்தம் 11 171 182

இமாச்சல பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கை

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 2 41 43
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0 1 1
இந்தியதேசிய காங்கிரஸ் 1 20 21
சுயேச்சை 0 3 3
மொத்தம் 3 65 68
LIVE: குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகள்: வெற்றி முகத்தில் பாஜக!
படத்தின் காப்புரிமைKEVIN FRAYER

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ட்விட்டரில் கருத்து

11.45: குஜராத் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட முதல் தொகுதி பாஜக வசமானது

 

குஜராத், இமாச்சல பிரதேசம் தேர்தல் முடிவுகள்: பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி:-(LIVE)

11.45: குஜராத் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட முதல் தொகுதி பாஜக வசமானது

குஜராத் மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 1 103 104
இந்திய தேசிய காங்கிரஸ் 0 72 72
தேசியவாத காங்கிரஸ் கட்சி 0 1 1
பாரதிய பழங்குடி கட்சி 0 2 2
சுயேச்சை 0 3 3
மொத்தம் 1 181 182

இமாச்சல பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கை

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 0 42 42
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0 1 1
இந்தியதேசிய காங்கிரஸ் 1 21 22
சுயேச்சை 0 2 2
மொத்தம் 1 66 67

LIVE: குஜராத் தேர்தல் முடிவுகள்: 100-ஐ எட்டியது பாஜக

மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ட்விட்டரில் கருத்து:

தற்போதைய நிலவரம்…

குஜராத் மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 0 101 101
இந்திய தேசிய காங்கிரஸ் 0 74 74
தேசியவாத காங்கிரஸ் கட்சி 0 1 1
பாரதிய பழங்குடி கட்சி 0 2 2
சுயேச்சை 0 3 3
மொத்தம் 0 181 181

இமாச்சல பிரதேச மாநில வாக்கு எண்ணிக்கை

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 0 40 40
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 0 1 1
இந்தியதேசிய காங்கிரஸ் 1 21 22
சுயேச்சை 0 2 2
மொத்தம் 1 64 65

11.25: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

11.24: இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட முதல் தொகுதியை காங்கிரஸ் வசமாகியுள்ளது.

10.55: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் 100 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 70 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

100-ஐ எட்டியது பாஜக

10.45: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 99 இடங்களிலும், காங்கிரஸ் 71 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

10.45இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 22 இடங்களிலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

கட்சி வெற்றி முன்னிலை மொத்தம்
பாரதிய ஜனதா கட்சி 0 100 100
இந்திய தேசிய காங்கிரஸ் 0 70 70
தேசியவாத காங்கிரஸ் கட்சி 0 1 1
பாரதிய பழங்குடி கட்சி 0 2 2
சுயேச்சை 0 2 2
மொத்தம் 0 173 173

10.15: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 94 இடங்களிலும், காங்கிரஸ் 65 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சிமற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

சதவீதம்

9.55: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 77 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும், பாரதிய பழங்குடி கட்சி மற்றும் சுயேச்சை ஆகியவை தலா இரண்டு இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

9.55: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 32 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், சுயேட்சைகள் இரண்டு இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

LIVE: குஜராத், இமாச்சல பிரதேசம் தேர்தல் முடிவுகள் - பாஜக - 94, காங்கிரஸ் - 65

9.40: குஜராத் மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 56 இடங்களிலும், காங்கிரஸ் 50 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் பாரதிய பழங்குடி கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

ராகுல், மோதி

9.27: இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கையில் பாஜக 10 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

9.20: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜக 37 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

தேர்தல்

9.18:இமாச்சல பிரதேச மாநிலத்தில் பாஜக 6 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

9.10: குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை காலை தொடங்கியுள்ள நிலையில், குஜராத்தில் காங்கிரஸ் 18 இடங்களிலும், ஆளும் கட்சியான பாஜக 17 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

LIVE: குஜராத் தேர்தல் முடிவுகள் - துவங்கியது வாக்கு எண்ணிக்கை

9.10: இதே போல இமாச்சல பிரதேச மாநிலத்திலும் முன்னணி நிலவரங்கள் தற்போது வெளிவந்துள்ளது. அங்கு பாஜக 2 இடங்களிலும்,காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன.

182 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில், கடந்த 9 மற்றும் 14 ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இருகட்ட வாக்குபதிவின் சராசரி 68.41 சதவீதம் ஆகும்.

இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதல் பகுதியாக தபால் வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

குஜராத்தில் உள்ள 37 மாவட்டங்களில் உள்ள அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் நடைபெறும் இந்த வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துவங்கியது வாக்கு எண்ணிக்கை

குஜராத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக 115 இடங்களையும், காங்கிரஸ் 61 இடங்களையும் வென்றன.

இதே போல மொத்தம் 68 தொகுதிகள் உள்ள இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இமாச்சல பிரதேசத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 36 இடங்களையும், பாஜக 27 இடங்களையும் வென்றன.

படத்தின் காப்புரிமைREUTERS

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

படத்தின் காப்புரிமைECI

படத்தின் காப்புரிமைELECTION COMMISION OF INDIA

THANKS – BBC

Add Comment

Click here to post a comment

Leave a Reply