குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் நேற்றிரவு கும்பலொன்றால் தனியார் நிறுவனத்தின் தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வயர்கள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாணத்தில் கேபிள் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கொடிகாம்ம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. CAX 9991 என்ற இலக்கமுடைய கறுப்பு நிற காரில் சென்ற வர்களாலேயே இந்த நாசகார வேலை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் சட்டவிரோதமான முறையில் கேபிள் இணைப்புக்களை வழங்கிவருபவர்கள் வரும் 31ஆம் திகதிக்குள் தமது சேவையை நிறுத்தவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அரசு அறிவித்துள்ளது இந்த நிலையிலேயே சட்டபூர்வமாக இயங்கும் தமது நிறுவனத்தின் கேபிள்கள் வெட்டிச் சேதப்படுத்தப்பட்டுள்ளன என குறித்து நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
Add Comment