இந்தியா சினிமா பிரதான செய்திகள்

குஜராத், இமாச்சலப் பிரதேச வெற்றியால் நிஜமாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா – மோடியிடம் பிரகாஷ் ராஜ் கேள்வி


2 மாநில தேர்தலில் பாரதிய ஜனதா ஆட்சியைப் பிடிக்கும் நிலையில், இந்த வெற்றியால் ? என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம், நடிகர் எழுப்பியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் முடிவுகளில் குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகளில் பாரதிய ஜனதா 107 தொகுதிகளில் முன்னிலை பெற்று 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சியை பிடிக்கிறது. அதே போல் இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளில் 43 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.

இரு மாநில வெற்றியை பாரதிய ஜனதா தொண்டரகள் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியிடம் தனது டுவிட்டர் பக்கத்தினூடாக இவ்வாறு கேட்டுள்ளார்.

அன்புள்ள பிரதமரே, வெற்றி பெற்றதற்கு முதலில் வாழ்த்துக்கள். ஆனால் இந்த வெற்றி குறித்து உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்ற தலைப்பில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.