உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்க ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் கூடைபந்தாட்டவீரர்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப்பை அந்நாட்டு பிரபல கூடைப்பந்தாட்ட வீரரான லிப்ரோன் ஜேம்ஸ் (LeBron James)   கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் அண்மையில் நடைபெற்ற போட்டியொன்றில் கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் சமத்துவம் என வசனம் எழுதப்பட்ட காலணிகளை பயன்படுத்தியுள்ளார்.

லிப்ரோன் ஜேம்ஸ், நான்கு தடவைகள் என்.பி.ஏ போட்டித் தொடரின் மிகப் பெறுமதிவாய்ந்த வீரர் என்ற விருதை பெற்றுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உரிமைகளை புரிந்து கொள்ளல், எதற்காக குரல் கொடுக்கின்றோம் என்பதனை விளங்கிக்கொள்ளல் என்பனவே சமத்துவம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் தலைவனை முன் மாதரியாகக் கொண்டு இயங்குவார்கள் என்பதனை ஜனாதிபதியினால் புரிந்து கொள்ள முடியவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply