உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இணைப்பு3- ரஹீம் ஸ்டெர்லிங்கை இன ரீதியாக தூற்றியவருக்கு சிறைத்தண்டனை

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இங்கிலாந்தின் பிரபல கால்பந்தாட்ட வீரரும், மான்செஸ்டர் சிட்டி கழகத்தின் முன்னணி வீரருமான ரஹீம் ஸ்ரேலிங் (Rahim Sterling)  ஐ இன ரீதியாக தூற்றிய நபர் ஒருவருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 29 வயதான கார்ல் அன்டர்சன் என்பவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். கால்பந்தாட்ட போட்டிகளில் குழப்பம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இவருக்கு எதிராக ஏற்கனவே சுமத்தி வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ரஹீமை இன ரீதியாக தூற்றியமைக்காக குறித்த கால்பந்தாட்ட போட்டி ரசிகரான அன்டர்சனுக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும், 100 ஸ்ரெலிங் பவுண்ட்களை நட்டஈடாக செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தாம் இன ரீதியாக ரஹீமை துன்புறுத்தியதாக, அன்டர்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.

Manchester City’s English midfielder Raheem Sterling speaks at a press conference in Manchester, north west England on October 16, 2017, on the eve of their UEFA Champions League Group F match against Napoli. / AFP PHOTO / Paul ELLIS (Photo credit should read PAUL ELLIS/AFP/Getty Images)

இணைப்பு2 – ரஹீம் ஸ்டெர்லிங் மீது இனவெறி தாக்குதல் நடத்தியவர் கைது

Dec 19, 2017 @ 10:56

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மீது ,னவெறி தாக்குதல் நடத்தியதாய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான ஒஐ நபரே ,து தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர் ரஹீம் ஸ்ரேலிங் மீது இனவெறி தாக்குதல்

இங்கிலாந்து கால்பந்து அணி வீரர் ரஹீம் ஸ்ரேலிங் (Rahim Sterling) தன்மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளார்.

23 வயதாகும் ரஹீம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் மன்செஸ்டர் சிட்டி அணிக்காக விளையாடி வருகிறார். இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மன்செஸ்டர் சிட்டி அணியின் பயிற்சி மைதானத்திற்கு சென்ற இனந்தெரியாத ஒருவர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தனது காலில் பலமுறை எட்டி உதைத்துள்ளதாகவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

தனது முறைப்பாட்டில் தன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இனவெறியை தூண்டும் வகையில் தாக்குதல் இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இதனைத் தொடர்ந்து மன்செஸ்டர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஹீம் டொட்டன்ஹாம் அணிக்கெதிராக மன்செஸ்டர் சிட்டி 4-1 என வெற்றியீட்டிய போது இரண்டு கோல்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.