பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 93 ஓட்டங்களால் வெற்றி


கட்டக் நகரில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 93 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது.  இன்று நடைபெற்ற மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பினை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி 20 ஓவர்களில் 180 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி பந்துவீச்சில் மேத்யூஸ், பிரதீப், பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து, 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி 16 ஓவர்கள் முடிவில் 87 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இதனால் இந்திய அணி 93 ஓட்ட வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி பந்துவீச்சில் சஹால் 4 விக்கெட்களும், பாண்டியா 3 விக்கெட்களும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும், உனத்கட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக இந்திய அணியின் சஹால் தெரிவு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கின்றது. இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி 22ம் திகதி நடைபெற உள்ளது.

இந்தியா சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap