சினிமா

ஏ.ஆர்.ரகுமானின் இடத்துக்கு அனிருத்

சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன்-2′ படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அடுத்தடுத்த பல படங்களுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருவதால், அவரால் இந்தியன் 2 படத்திற்கு இசையமைக்க முடியாத நிலைய ஏற்பட்டுள்ளதனைத் தொடர்ந்து அனிருத்தை இந்த படத்திற்கு இயக்குநர் சங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெறுவதனால் அதனை முடித்த பிறகு இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் இணையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply