ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரியாசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து எற்பட்ட விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்த அப்பகுதிக்கு சென்று மீட்புப்பணிகளை மேற்கொண்ட மீட்புப்படையினர் . இடிபாடுகளில் இருந்து 13 பேரை மீட்டுள்ளனர். அதில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலரது நிலைமை மோசமாக இருப்பதால் உயிரிழந்தேதரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Add Comment