சினிமா

ஏஆர் ரஹ்மானை கௌரவிப்பதற்காக பாடல் பாடவுள்ள ரஜினிகாந்த்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொண்டு பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் டிசம்பர் 23ம் திகதி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் என்கோர் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியிலேயே ரஜினிகாந்த் பாடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘2.0’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். திரைத்துறையில் ஏ.ஆர்.ரஹ்மான் கால் பதித்து 25 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஏஆர் ரஹ்மானை கௌரவிக்கும் வகையில் ரஜினிகாந்த் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1992-ல் வெளியான மன்னன் படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply