சினிமா

இயக்குநர்கள் ராம் – மிஷ்கின் தீட்டிய சவரக்கத்தி பெப்ரவரியில்


ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் இயக்குநர் ராம் – மிஷ்கின் நடிப்பில் உருவாகி வரும் சவரக்கத்தி படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா  சவரக்கத்தி மூலம் இயக்குநராக அறிமுமாகியுள்ளார்.


இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இயக்குநர் மிஷ்கின் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இயக்குநர் ராம் – பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லோன் வோல்ப் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார்.

கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்ற நிலையில் படம் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply