இலங்கை பிரதான செய்திகள்

காணிகள் விடுவிக்கப்படும் – லெப்ரினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க….

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
யாழ்ப்பாண மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில் மேலும் சிலவற்றை விடுவிப்படுவது தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்குவோம் என இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ். மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்திரையாடினார்
யாழ் மாவட்ட செயலகத்தில் இந்தச் சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது. யாழ். மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் அரச அதிபர் இதன்போது இராணுணவத்தளபதிக்கு நன்றி தெரிவித்தார்
மேலும் பல காணிகள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைக் கட்டடங்கள் போன்றவற்றையும் விரைவில் விடுவித்து மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துமாறும் அரச அதிபர் கோரிக்கை விடுத்தார்.
 இவ்விடயம் தொடர்பில் தாம் சாதகமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக இராணுவத்தளபதி தெரிவித்ததாக யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வெதநாயகன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply