இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – “விஹாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரியுங்கள்” – நீதிமன்றம் அனுமதி:-

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்.முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்ய யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதியை வழங்கியிருக்கின்றது. யாழ்.ஆரியகுளம்- நாகவிகரை விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவரது பூதவுட லை யாழ்.முற்றவெளியில் தகனம் செய்வதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கம் தலமையில் 12 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இதன்போது விகாராதிபதியின் உடல் தகனம் செய்யப்படும் பகுதியில் கொட்டடி பொது சந்தை, எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் வைத்தியசாலை உள்ளிட்ட மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் காணப்படுவதால் அந்த இடத்தில் தகனம் செய்ய கூடாது எனவும் பொது இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படுவதால் சுற்று சூழலுக்கு பாதிப்பு எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதற்கு பதிலாக பொலிஸார் தரப்பில் கூறுகையில் இந்த தகன கிரிகையை தடுத்தால் அமைதியின்மை உருவாகும் எனவும், இராணுவம் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதியைப்
பெற்றே செய்வதாகவும் கூறினார்.

இதனையடுத்தே நீதிமன்றம் தகன கிரிகையை திட்டமி ட்டபடி நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கில் ஆஜரான சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், இங்கே நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது. இங்கே அடக்குமுறை இராணுவ ஆட்சியே நடக்கின்றது என்றார்.

“விஹாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரியுங்கள்” – நீதிமன்றம் அனுமதி வழங்கியது:-

யாழ்.நாக விஹாரை விஹாராதிபதியின் உடலை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் எரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இப்பகுதியில் தேரரின் உடலை எரிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறு தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த யாழ். நீதவான் நீதிமன்றம், தடைவிதிக்க மறுப்பு தெரிவித்து அனுமதியை வழங்கியுள்ளது.

தொல்லியல் பொருட்கள் காணப்படும் இவ்விடத்திற்கு அருகில், தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியும் அமைந்துள்ளது. இந்நிலையில், தேரரின் உடலை அங்கு எரிக்க வேண்டாமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்  மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.