இலங்கை பிரதான செய்திகள்

புலம்பெயர் தமிழர்களின் கல்வி கலைச் செயற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்:-

(மண்சுமந்த மேனியர் மோகன் – முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர்)

அமெரிக்க வட கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் செல்வராஜா மோகனராஜா மற்றும் அமெரிக்க பிறின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவன் ஞானசேகரன் மகிசன் ஆகியோரருடன் புலம் பெயர் தமிழர்களின் கல்வி மற்றும் கலைச் செயற்பாடுகள் அனுபவங்கள் பற்றிய  விசேட கலந்துரையாடல் இம்மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை யாழ்ப்பாணம் கந்தர் மடம் பழம் வீதியில் அமைந்துள்ள பண்பாட்டு மலர்ச்சி கூடத்தில் யாழ்பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத் துறைத் தலைவர் கலாநிதி க.சிதம்பரநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அமெரிக்க கல்வி முறையியல் ,புலம் பெயர் வாழ் ஈழ மக்களின் வாழ்வியல் ,கலை கலாசாரச் செயற்பாடுகள் குறித்து பேராசிரியர் மோகனராஜாவும். அமெரிக்க பல்கலைக்கழக கல்வியியல் முறைமை கள் ,இ ளைஞர்களின் பங்களிப்பு , மற்றும் இரண்டாம் தலைமுறையினரின் கலைச்செயற்பாடுகள் பங்களிப்புகள் குறித்து தாயகத்தில் பிறந்து புலம் பெயர்ந்து அமெரிக்க பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் ஞானசேகரன் மகிஷனும் கலந்துரையாடவுள்ளனர்.

மேலும் பேராசிரியர் மோகனராஜா ஈழத்தில் 1980 களில் யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானத்துறை மாணவனாக கல்வி பயின்ற காலத்தில் பல்கலைக்கழக கலாசார குழுவினை தோற்றுவித்தவர்களுள் ஒருவர். தமிழ்த் தேசிய விடுதலை அரங்காக சமூக மாற்றத்திற்கான அரங்கப் பணியில் முத்திரை பதித்துக் கொண்ட யாழ் பல்கலைக்கழக கலாசார குழுவின் மண் சுமந்த மேனியர் ஆற்றுகை மற்றும் மாயமான் தெருவெளி அரங்கு ஆகியவற்றில் பங்குபற்றிய தனது அனுபவங்கள் குறித்தும் சமூக மாற்றத்திற்கான பணியில் அரங்கின் பங்களிப்பு குறித்தும் உரையாடவுள்ள பேராசிரியர் மோகனராஜா புலம்பெயர் வாழ் மண்சுமந்த மேனியர் ஆற்றுகை யாளர்களின் இணைப்பில் உருவான “” நம்கலை “”குழுவைச் சேர்ந்தவர் .

அத்துடன் மண்சுமந்த மேனியர் ஆற்றுகையாளரான அளவெட்டியைச் சேர்ந்த ஞானசேகரனின் புதல்வரான மகிஷன் 2016ஆகஸ்ட் மாதம்அமெரிக்க மாநிலமான நியூஜெர்சியின் உயர்நிலைப் பிரிவில்கல்வி பயிலும் மாணவர்களில் கல்வி, சமூகசேவை, மாணவ தலைமைத்துவம்  ஆகிய துறைகளில்முதல் நிலைமாணவராக விசேடதேர்வு மூலம் தெரிவுசெய்யப்பட்டு அம்மாநிலத்தின் பிரதிநிதியாக அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு அழைக்கப்பட்டு அங்கு ஒருவார காலம் தங்கியிருந்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சட்ட சபை உறுப்பினர்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து மாணவ தலைமைத்துவம், சமூகநல செயற்பாடுகளில் மாணவர்களின் பங்களிப்பு போன்ற பல முக்கிய விடயங்களைப்பற்றி கலந்துரையாடியுள்ள முதலாவது ஈழத் தமிழ் மாணவன் ஆவார். இவரது கல்வி சமூக சமய செயற்பாடுகள் குறித்து ஒபாமாவினால் பாராட்டையும் பெற்றவர்.

எனவே குறித்த இக்கலந்துரையாடலில் ஆர்வமுள்ள இளைஞர்கள் , கல்வியியலாளர்கள் , கலைஞர்கள் அரங்கத்துறை மாணவர்கள், படைப்பாளிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக நலன்விரும்பிகளைக்கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி பண்பாட்டு மலர்ச்சி கூடத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap