சினிமா

பாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா

பிரபல இணையதளமான ஐஎம்டிபி (IMDb ) மேற்கொண்ட 2017 ஆண்டின் சிறந்த 10 இந்தியப் படங்களின் பட்டியலில் பாகுபலியை பின்னுக்கு தள்ளி விக்ரம் வேதா முதலிடத்தைப் பிடித்துள்ளது. ,இணையதளங்களில் படங்களைப் பற்றிய தகவல்களை கொடுப்பதில் முக்கியமானது ஐஎம்டிபி முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தவகையில் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய படங்களை வெளியிட்டுள்ளது

இதில் 10-வது இடத்தில் மலையாள படமான ‘தி க்ரேட் பாதர்’, 9-வது இடத்தில் ‘மெர்சல்’, 8-வது இடத்தில் இந்திப் படமான ‘ஜாலி எல்.எல்.பி 2’, 7-வது இடத்தில் இந்திப் படமான ‘டாய்லெட்- ஏக் பிரேம கதா’, 6-வது இடத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியான ‘தி காஸி அட்டாக்’, 5-வது இடத்தில் இந்திப் படமான ‘இந்தி மீடியம்’, 4-வது இடத்தில் இந்திப் படமான ‘சீக்ரெட் சூப்பர்ஸ்டார்’, 3-வது இடத்தில் தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’, 2-வது இடத்தில் ராஜமௌலியின் ‘பாகுபலி – 2’ மற்றும் முதல் இடத்தில் மாதவன் – விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’ என பட்டியலிட்டு இருக்கிறார்கள்.

தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதிக ரசிகர்களை கவர்ந்த ‘விக்ரம் வேதா’ படத்துக்கு ஐஎம்டிபி இணையம் முதல் இடத்தைக் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் வேதா படத்தில் மாதவன், விஜய் சேதுபதி, கதிர், வரலட்சுமி சரத்குமார், ஸ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தார்.

 

 

 

 

 

2017 பட்டியல்
1. விக்ரம் வேதா (தமிழ்) – நடிப்பு : விஜய் சேதுபதி, மாதவன்

2. பாகுபலி 2 (தெலுங்கு) – நடிப்பு : பிரபாஸ், அனுஷ்கா, ராணா

3. அர்ஜுன் ரெட்டி (தெலுங்கு) – நடிப்பு : விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே

4. சீக்ரெட் சூப்பர் ஸ்டார் (ஹிந்தி) – நடிப்பு : சாய்ரா வாசிம்

5. ஹிந்தி மீடியம் (ஹிந்தி) – நடிப்பு : இர்ஃபான் கான் சபா கொமர்

6. தி காஸி அட்டாக் (தெலுங்கு) – நடிப்பு : ராணா

7. டாய்லெட் – ஏக் பிரேம் கதா (ஹிந்தி) – நடிப்பு : அக்‌ஷய் குமார்

8. ஜாலி எல்எல்பி 2 (ஹிந்தி) – நடிப்பு : அக்‌ஷய் குமார், ஹூமா குரேஷி

9. மெர்சல் (தமிழ்) – நடிப்பு : விஜய், சமந்தா, காஜல் அகர்வால்

10. தி காட் ஃபாதர் (மலையாளம்) – நடிப்பு : மம்முட்டி, ஸ்நேகா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.