உலகம் பிரதான செய்திகள்

ஸ்பெய்னுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்பெய்னுடன் பேச்சவார்த்தை நடத்தத் தயார் என கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont   )தெரிவித்துள்ளார். கட்டலோனிய பிராந்தியத்தில் நடைபெற்ற தேர்தலில், கட்டலோனியா சுதந்திர நாடாக பிரகடனம் செய்யப்பட வேண்டுமென கோரிய தரப்புக்கள் சிறு வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளன.

தற்போது மறைந்து வாழ்ந்து வரும் கார்லெஸ் பூகிடமண்ட் இதுவே பேச்சுவார்த்தைக்கு சிறந்த தருணம் என தெரிவித்துள்ளார்.
புதிய கட்டலோனிய தலைவர்களிடம் இது குறித்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். எனினும் ஸ்பெய்ன் அரசாங்கம் இவ்வாறான பேச்சுவார்த்தைகளை நடாத்த விரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.