இலங்கை கட்டுரைகள்

கட்புல காண்பியலில் ஒலியை பயன்படுத்தினால் …. அவ(ன்,ள்) – (ரவிச்சந்திரன் சுதா)

mde

உலகளாவிய ரீதியில் இன்று ஓவியம் முக்கியத்துவம் பெருகின்றது.காண்பவரைக் கவரந்திருக்கும் உள்ளங்களை திளைக்க செய்யும் ஒரு விடயமாக காணபடுகிறது. அவ்வகையில் குகைகளில் வாழ்ந்த மக்கள் தம் வாழ்வியலை சித்தரிக்கும் முகமாக அவர்களது அன்றாட வாழ்வியலை  கோட்டு உருவமாக வரைந்தனர்.அதுவே ஓவியத்தின் வளர்ச்சி போக்கு  ஆரம்பமான காலம் தொடங்கியமைக்கு சான்றாகும்.அதனை தொடர்ந்து இன்றைய நாள் வரை ஓவிய முறைகள் பல நாளுக்கு நாள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது.

இவ்விதம் contemporary art, insulationart, flash art,abstractpainting, popart, photorealism எனகூறிக்கொண்டே போகலாம். இவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ள ஓவிய துறையில் சமகால கலை சிறந்த இடத்தை பெற்றுள்ளது. ஓவியத்தில் அது எந்த கால பகுதியாக இருப்பினும் காட்சிப்பொருள்என்பது கட்டாயமாகும்.இவ்வாறு ஒலி கலையில் ஒலிக்கு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்றது. ஒரு ஓவியன் தான் மனத்தால் உள்ள, ஊட்டங்களால் ஈர்க்கப்பட்டதொரு விடயத்தை அல்லது காட்சி பற்றி தனது அனுபவத்தாலும்,திறமையினாலும் ஒரு ஓவியத்தை படைக்கிறான். அது மீண்டும் சமுகத்தின் பார்வைக்கு விடப்படுகிறது.இவ்வாறு படைப்பாளி ஒரு கருத்தை தான் ஆற்றலினூடு ஊடு கடத்தும் ஒரு ஊடகமாகவே கருதப்படுகிறான். இவ்வாறானதொருகருத்துப்பரிமாற்றத்தில் விடயப்பொருள் பறிமாறுகிறதா என்றால் அனேகமாக இல்லை என்ற பதிலே நான் கூறுவேன்.இதன் போது கருத்துப்பரிமற்ற்தில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.அழகியல் இடைவெளிகளும் வரும்.சமகால கலைகளில் உள்ள படைப்பாக்கங்கள் குறியீடுகளாலும்,வர்ண உத்தி முறைகளாலும் நிவர்த்தி செய்யப்படுகின்றன.இது எல்லோராலும் புரிந்துகொள்ள கூடியதாக காணப்படுமா இதற்கு தீர்வாக குறித்த விடய பொருளுக்குரிய காண்பியளுடன் ஒரு ஒலி வடிவைத்தை பயன்படுத்தினால் பார்வையாளன் அந்தகாண்பியலின் பொருளையும் அதற்கான உணர்சிகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.அத்துடன் திட்டமிட்டு ஒலிகோப்பையோ உபயோகிபதினால் தொடுகையுடனும் நுகர்ச்சி வெளிச்சம் என்ற சேர்க்கையுடன் சேர்ந்து காண்பியலுடன்ஓவியன் தான் சொல்ல வந்த கருதும் செவ்வனே வெளிபடுத்தும் இலகுவாக இருக்கும்.

dav

மேலும் படைப்புக்கும் பார்வையாளனுக்கும் உள்ள இடைவெளியை வெறும் தூர இடைவெளியாக மட்டுமே நாம் கருத்தில் கொள்வோம். ஆனால் உண்மையில் ஒலி ஓவியத்தில் பாரிய செல்வாக்கு செலுத்துகிறது என்பதை யாரும் ஏற்றுகொளவதில்லை.எந்த ஒரு படைப்பாக இருபினும் அது எந்த கால பகுதியை சேர்ந்ததாக இருபினும் அதனை பார்வையிடும் போது காண்பியல் தொடர்பு எவ்வாறானதோ அவ்வாறே ஒலி தொடர்பும் காணபடுகிறது. அது படைப்புவைக்கப்பட்டுள்ள இடத்தை பொருத்து மாறலாம். இதற்கு காட்சியகங்களில் இடையூறாகவரும் ஒலியை கட்டுபடுத்த அமைதி பேணப்படலாம். ஆனால் நிசப்தம் கூட ஒரு ஒலி ஆகும்.எப்படியோஏதோ ஒரு ஒலி எம் செவியை அண்டிக் கொண்டே இருக்கும். இவ்வாறு இடையூறாக இருக்கும் ஒலியை தவிர்க்க குறித்த கண்பியலுக்கு ஏற்ற ஒலியை ஒளிபரபுவதினலோஏற்படுதத்துவதினலோ ஈடு செய்யக்ககூடியாதாக அமையும்.

இவ்வாறுஆராயுமிடத்துஒலி[sound+audio] எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறதோ அதே போல் நுகர்ச்சி[smell],சுவை[taste],தொடுகை[sence],ஒளி[light]போன்ற துணை காரணிகளும் செல்வாக்கு செலுத்துகிறது.ஒலி கலை எமக்கு இன்று புதியதொரு விடயமாக இருந்தாலும் இது காலம் காலமாக ஓவியத்துக்கும் பார்வையாளனுக்கும் இருக்கும் உறவு நிலையின் உச்சம் என்றால் மிகையாகாது.இதனை வெளிபடுத்தும் வகையில் என்னால் செய்யப்பட்ட காண்பியல் கண்காட்சியே அவ[ன்/ள்].

mde

ஒலி கலையை மையப்படுத்திய அவ[ன்/ள்] எனும்காண்பியல்CONCEPTUAL ARTனது சட்டை ஊசிகளுடன் ஒளியை[light] பயன்படுத்தி ஒலி

கோர்வையுடன் சேர்ந்துதொடர்ந்து ஒலிக்கக்கூடிய வகையில் ஒழுங்குச்செய்யப்பட்டுள்ளது.இதன் கருப்பொருளாக நம் சமூகத்தில் வாழும் மூன்றாம் நிலை பாலினத்தவர்ளைஎடுத்துள்ளேன்.இந்த கருப்பொருளை எடுத்தமமைக்கான காரணம்.ஆண் பெண் என்ற இரு பாலினமே காணப்படுகிறது.அதிலும் இவ்விரண்டு பால் நிலையிலுமே அநேக பிரச்சனைகள் காணப்படும் நிலையில் மூன்றாம் பாளலினத்தவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள்ஆண் என்றோ பெண் என்றோ அடையாளம் சுட்டமுடியாத மனிதர்களே. நம்மிடையேஒரு ஜடமாக வாழும் இவர்கள் யார் என்ற அடையாளம் இல்லாமல் அதுவும் இலங்கையை பொறுத்தவரை ஆண்,பெண் என வாழும் சூழலில் தாம் யார் என்ற அடையாளம் இல்லாமல் உலவும்,ஒரு உயிர் இருந்தும் உயிரற்றபொருளாக வாழ்கின்றனர்.அவர்களின் உணர்வு வெளிப்பாடும்,அவர்களது யதார்த்த வாழ்வியலும், ஆசா பாசங்களையும்,சமுகத்தின் பார்வை அவர்கள் பற்றி எவ்விதம் உள்ளது என்பதையும் அவர்களின் பார்வை சமூகம் பற்றி எவ்விதம் உள்ளது என்பதையும்எனது கண்பியலின் கருபொருளாக கொண்டு இக் கண்காட்சியை வடிவமைத்துள்ளேன்.

இதில் சட்டை ஊசியை பெண்களுக்கு  குறியீடாக  பயன்படுத்தி உள்ளமைக்கான காரணம் நானும் ஒரு பெண் என்ற ரீதியில் சட்டை ஊசிக்கும் பெண்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக நான் உணர்கிறேன்.பெண்களே அதிகமாக சட்டை ஊசி தேவைகளுக்காக பயன் படுத்துவோம்.அவ்வகையில் சமூகத்தில் திருநங்கைகள் என தம்மை ஒருஇனமாகஅடையாளபடுத்தி கொள்ளும் இவர்கள் உண்மையில் இலங்கையில்இது வரை அவர்களுக்கான பால் மாற்றத்துக்கான அங்கீகாரம் நம் நாட்டில் கொடுக்கப்படவில்லை என்பது வெட்கத்துக்குரிய விடயமாகும்.இவர்களின்நிலைமையின்நியாயப்பாட்டினை ஓவியமாக வெளிப்படுத்துவதை விட ஒலி மூலம் காண்பியளுடன் வெளிபடுத்தினால் பார்வையாளனுக்குசென்றடைவதுடன்பார்வையாளனுக்கும் ஓவியத்துக்கும்இடையிலானகருத்தியல் தடைகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும்.இவ்வாறு ஓவியத்தில் காண்பியளுடன் ஒலியை பயன்படுத்தினால் ஓவியன் தான்எண்ணிய கருத்தை பார்வையாளனுக்கு செலுத்த இலகுவாக அமையும்.இதனடிப்டையில் இவ் கான்பியலை வடிவமைத்துள்ளேன்.

(ரவிச்சந்திரன் சுதா)

mde

Add Comment

Click here to post a comment

Leave a Reply