சினிமா

வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கை பற்றிய படத்தில் நடிப்பது பெருமைக்குரியது – பிரகாஷ் ராஜ்

டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் படத்தில் தானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். க்ரீன் சிக்னல் கம்பெனி நிறுவனம் தயாரித்து வரும் படமான டிராபிக் ராமசாமி திரைப்படம் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமூகப் போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படுகிறது.

இதில் டிராபிக் ராமசாமியாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரும் அவருடைய மனைவியாக ரோகினியும், இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும் விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு ஆகியோரும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்தநிலையில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கும் பிரகாஷ் ராஜ் இதில் நடிப்பது குறித்து தெரிவிக்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சமூகப் போராளியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் நடித்ததை மிகுந்த பெருமையாக கருதுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரகாஷ் ராஜ் வரும் காட்சிகள் படத்திற்குப் பெரும் பலமாக இருக்கும் என படத்தின் இயக்குநர் விஜய் விக்ரம் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை குகன். எஸ்.பழனியும், பாடல்களை கபிலன் வைரமுத்துவும், இசையை ஹர ஹர மகாதேவகி புகழ் பாலமுரளி பாலுவும் மேற்கொள்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply