சினிமா

அருவி படம் சிரிக்க வைத்தது – அழ வைத்தது – யோசிக்க வைத்தது – ரஜினிகாந்த் – படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டு

அருவி பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் மற்றும் நாயகி அதிதி பாலனை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் பரிசு வழங்கியுள்ளார். டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்மையில் வெளியாகிய அருவி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதீதி பாலன் நடித்துள்ளார். படத்தின் இயக்குநருக்கும், நாயகிக்கும், தயாரிப்பாளருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், அண்மையில் அருவி படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் படக்குழுவை பாராட்டியுள்ளார்.

மேலும் படத்தின் இயக்குநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ரஜினி, அருவி படம் தன்னை சிரிக்க வைத்தது, அழ வைத்தது, யோசிக்க வைத்தது. இந்த படத்தை எடுத்ததற்கு பாராட்டுக்கள். தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக வருவீர்கள் என பாராட்டியிருக்கிறார்.

அதேபோல் படத்தின் நாயகி அதிதி பாலனுக்கும் பாராட்டு தெரிவித்த ரஜினிகாந்த் படக்குழுவை நேரில் அழைத்து இயக்குநர் அருண் பிரபுவுக்கும், அதிதி பாலனுக்கும் தங்க சங்கிலி ஒன்றை பரிசாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply