சினிமா

15வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஒரு கிடாயின் கருணை மனு சிறந்த படமாக தெரிவு

கடந்த 21-ம் திகதி நிறைவு பெற்ற 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட 50 நாடுகளைச் சேர்ந்த சுமார் 150 திரைப்படங்களில் 12 தமிழ்ப் படங்களும் உள்ளடங்குகின்றன. தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் குரங்கு பொம்மை, விக்ரம் வேதா, துப்பறிவாளன், தரமணி, அறம், ஒரு கிடாயின் கருணை மனு, 8 தோட்டாக்கள், மாநகரம், மகளிர் மட்டும், கடுகு, மனுசங்கடா, ஒரு குப்பை கதை ஆகிய 12 படங்கள் போட்டியிட்டன.

இதில் சிறந்த திரைப்படமாக சுரேஷ் சங்கையா இயக்கத்தில் விதார்த், ரவீனா நடிப்பில் உருவான ஒரு கிடாயின் கருணை மனு சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. புஷ்கர் – காயத்ரி இயக்கிய விக்ரம் வேதா படத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்தது.
மாநகரம் படத்திற்கு சிறப்பு ஜூரி விருதும் குரங்கு பொம்மை படத்தில் நடித்த பாரதிராஜவுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது.
அத்துடன் விஜய் சேதுபதிக்கு அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகளை நிறைவு விழாவில் கே.பாக்யராஜ் வழங்கினார்.

இந்தநிலையில் விஜய் சேதுபதி விருதுடன் சேர்த்து தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை சர்வதேச திரைப்பட விழாவை நடத்தும் இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனுக்கே வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply