இலங்கை பிரதான செய்திகள்

அமெரிக்காவால் தேடப்படும் ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறைவு – இரு நாடுகளின் இராஜதந்திர நெருக்கடியில் சிக்கியது இலங்கை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

அமெரிக்காவால் தேடப்படும் கணிணி நிபுணரான ரஸ்ய பிரஜை இலங்கையில் தலைமறவானமை குறித்து அமெரிக்கா கடும் விசனம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஸய குடிமகனான இணைய திருட்டின் மூலம் மனோன் பெடெர் ரவுவோவிச் என்ற கணிணி நிபுணர், தனிப்பட்ட தகவல்களையும் நிதி தொடர்பான இரகசியங்களையும் ஹக்கிங் செய்தார் என குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க புளோரிடா நீதிமன்றம் அவரை நாடுகடத்தவேண்டும் என இலங்கைக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளது.

ரஸ்ய குடிமகனான மனோன் பெடெர் ரவுவோவிச் இலங்கையின் வெலிகம பகுதியில் தங்கியிருந்த வேளை கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகியுள்ளார். இவரை பிணையில் விடுதலை செய்தவேளை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிஜடியினரிடம ஆஜராகவேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததாக தெரிவித்துள்ள அதிகாரிகள் எனினும் அவர் கடந்த 4ம் திகதி சமூகமளிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்தக் கணிணி நிபுணர் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றவேளை அமெரிக்க ரஸ்ய தூதரக அதிகாரிகள் பலர் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தமை, இந்த விடயத்தில் இரு நாடுகளும் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதேவேளை குறிப்பிட்ட ரஸ்ய பிரஜை, நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளாரா? இலங்கையிலேயே தலைமறைவாகி உள்ளாரா? என்பது குறித்து தெரியவில்லை என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அமெரிக்க நீதிமன்றம் தமது நாட்டிற்கு இவர் கடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ள அதே வேளை ரஸ்யா தம்மிடம் அவர் ஒப்படைக்கப்பட வேண்டும் என கோரியுள்ளமை கடுமையான ராஜதந்திர அழுத்தங்களுக்கு இலங்கை உள்ளாகி இருப்பதை காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply