Home உலகம் எகிப்தில் 15 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

எகிப்தில் 15 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

by admin


எகிப்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட 15 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு எகிப்தின் சோதனைச் சாவடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்டமைக்காக   ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது எனவும் சினாயின் வடக்கு பகுதியில் இவ்வாறு தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும் எகிப்தின் அரசு தரப்பு செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது

எகிப்தின் சினாய் பகுதியில் கடந்த 2013 முதல் பாதுகாப்புப் படையினருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் படையினருக்கு ஆதரவாக உள்ள பொது மக்கள் மீதும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More