சினிமா

ஆரவ் மூலம் பெருமைப் படுகிறேன் – ஜெயம் ரவி


மகன் ஆரவ் மூலம் ஒரு தந்தையாக பெருமைப் படுகிறேன் என நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் நடித்த டிக்டிக்டிக் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் டிக் டிக் டிக் திரைப்படமானது இந்தியாவின் உருவாகும் முதல் விண்வெளி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ், தனது டப்பிங் பணியை முடித்துள்ளார். தன்னுடைய மகன் முதல் முறையாக டப்பிங் கொடுத்தது பற்றி தெரிவிக்கையிலேயே ஜெயம் ரவி தந்தையாக மிகவும் பெருமைப்படுகிறேன் எனவும் இதற்கு காரணமான சக்தி சவுந்தர் ராஜனுக்கு மிகவும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவியின மகன் ஆரவ்வும் நடித்துள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடித்திருக்கிறார். அத்துடன் ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன்,; உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இற்திய குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 26-ஆம் திகதி இந்த டிக்டிக்டிக் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறன என்பது குறிப்பிடத்தக்கது

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply