Home பிரதான செய்திகள் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியுள்ளது

by admin

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-வதும் இறுதியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 66 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று மேற்கு இந்தியத் தீவுகளை நியூஸிலாந்து அணியை வைட்வோஷ் செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஏற்கனவே ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது.

இந்தநிலையில் நேற்றையதினம் இடம்பெற்ற 3வது போட்டி மழையின் காரணமாக 23 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 23 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. 166 ஓட்டங்கள்; எனற் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவர்களில் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வினை சந்தித்தது. இதையடுத்து தொடரை 3-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்று வைட்வோஷ் செய்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More