உலகம் பிரதான செய்திகள் பெண்கள் விளையாட்டு

சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் – அன்னா முசைச்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள சதுரங்கப் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என உலக சதுரங்கப் போட்டித் தொடர்களில் இரண்டு தடவை சாம்பியன் பட்டம் வென்ற அன்னா முசைச் ( Anna Muzychuk   ) தெரிவித்துள்ளார். பெண்கள் உரிமை தொடர்பான விவகாரங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு சவூதி அரேபியாவில் நடைபெறும் போட்டித் தொடரை அன்னா முசைச் புறக்கணிக்க உள்ளார்.

சவூதி அரேபிய அரசாங்கம் பெண்களை இரண்டாம் தர மிருகங்களாகவே நோக்குவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்தப் போட்டித் தொடரில் வெற்றியீட்டுவோருக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர் பணப் பரிசு வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. பெருந்தொகைப் பணப் பரிசு கிடைக்கப் பெற்றாலும் கொள்கைகளை அதற்காக தாரை வார்த்துக் கொடுத்துவிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers