உலகம்

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து விளக்கம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 21ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்த விளக்கம் அளிக்கப்பட உள்ளது. யுத்தம் தொடர்பான விவகாரங்களில் முன்னேற்றத்தை பதிவு செய்வதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.


யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த 2015ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37ம் அமர்வுகளில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்  சயிட் அல் ஹூசெய்ன்  தெளிவுபடுத்த உள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply