குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோதமான முறையில் துருக்கி செல்ல முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் மினுவன்கொட நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட போது பிணை நிபந்தனைகளை பூர்த்திய செய்ய முடியாத காரணத்தினால் அவர்களை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மினுவன்கொட நீதவான் சிலானி சத்துரன்தி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Add Comment