Home இந்தியா இந்திய சனத்தொகையில் அரைவாசிப்பேர் வறுமைக் கோட்டில் – “திரிவேணி சங்கமம்” எனப்படும் ஆற்றுப்படுக்கையின் கும்பமேளா மதச் சடங்கிற்கு 2500 கோடி ஒதுக்கீடு….

இந்திய சனத்தொகையில் அரைவாசிப்பேர் வறுமைக் கோட்டில் – “திரிவேணி சங்கமம்” எனப்படும் ஆற்றுப்படுக்கையின் கும்பமேளா மதச் சடங்கிற்கு 2500 கோடி ஒதுக்கீடு….

by admin


2019-ல் கும்பமேளாவை சிறப்பாக நடத்துவதற்காக 2,500 கோடி ரூபாயை முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒதுக்கீடு செய்துள்ளார். இதையடுத்து கும்பமேளாவுக்கான பணிகள் ஆரம்பமாகி உள்ளன.  இந்த கும்பமேளாவுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ள போதிலும் உத்தரபிரதேச மாநில அரசு இப்போதே ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது . இதற்காக முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் கங்கை, யமுனை ஆறுகளுடன் கண்ணுக்குத் தெரியாத சரசுவதி ஆறும் ஒன்று சேரும் இடம் உள்ளது. “திரிவேணி சங்கமம்” என்று அழைக்கப்படும் அந்த பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை மகா கும்பமேளாவையும், 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை அர்த்த கும்பமேளாவையும் நடத்தி வருகிறார்கள்.

கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு அங்கு அர்த்த கும்பமேளா இடம்பெற்றது. 6 ஆண்டுகள் நிறைவு பெற உள்ள நிலையில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடைபெற உள்ளது. கும்பமேளாவின் போது பல லட்சம் பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே புதிதாக கரை அமைக்கும் பணியும் ஆரம்பிக்கப்படஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டு கும்பமேளாவுக்கு ரூ.950 கோடி செலவிடப்பட்டது. தற்போது 2019-ம் ஆண்டு கும்பமேளாவுக்கு அந்த தொகையை விஞ்சி சுமார் 3 மடங்கு பணத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கு சமாஜ்வாதி கட்சி கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த மிகப்பிரமாணட் ஏற்பாடும் ஆயிரக்கணக்கான கோடி ரூபா செலும் திரிவேணி சங்கமம் பகுதி படகு இயக்குபவர்களை மகிழ்ச்சி ஊட்டுவதாக இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகை ஒரு மதச்சடங்குக்காக, ஐதீக நம்பிக்கையின் அடிப்படையிலான சடங்குகளுக்காக செலவிட வேண்டுமா? என்ற கேள்விகளை் இந்திய அளவில் எழுந்துள்ளன.

இந்திய சனத்தொகையில் அரைவாப்பேர் வறுமைக்கோட்டில் வாழ்கின்ற போது “திரிவேணி சங்கமம்” எனப்படும் ஆற்றுப்படுக்கையில் லட்சக்கணக்காணவர்கள் கூடி நீராடும் கும்பமேளா என்ற மதச் சடங்கிற்காக 2500.00 கோடி ரூபா ஒதுக்கிடா? என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Devotees attend the third “Shahi Snan” (grand bath) on the banks of Godavari river at the ongoing Kumbh Mela or Pitcher Festival in Nashik, India, September 18, 2015. Hundreds of thousands of Hindus took part in the religious gathering at the banks of the Godavari river in Nashik city at the festival, which is held every 12 years in different Indian cities. REUTERS/Danish Siddiqui

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More