Home உலகம் அமெரிக்காவில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசமும் பலியாகும் இந்தியர்களும்…

அமெரிக்காவில் தொடரும் கொள்ளையர்களின் அட்டகாசமும் பலியாகும் இந்தியர்களும்…

by admin


அமெரிக்காவின் சிகாகோ மாநிலத்தில் எரிபொருள் வாயு நிரப்பு நிலையத்தில் நுழைந்த கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குஜராத்தை சேர்ந்த வாலிபர் உள்பட இருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியதில்  இந்தியர் பலியாகி உள்ளார்.

அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் டால்டன் நகரத்தில் எரிபொருள் வாயு நிரப்பு நிலையத்தில் Dolton Gas Station நேற்று இரவு கொள்ளையர்கள் நுழைந்தனர். அங்கு இடம்பெற்ற துப்பாச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பலியானவர்களில் 19 வயதான அர்ஷாத் வஹோரா என்பவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொள்ளையர்களை தேடி வருவதாகவும், பலியான வஹோரா அங்குள்ள கடையில் பணிபுரிவதாகவும் டால்டன் காவற்துறையினர் தெரிவித்துனர்.

CCTV காட்சிகளை கொண்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்துவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர், எனினும் தற்போது அங்கு கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More