பிரதான செய்திகள் விளையாட்டு

2017-ம் ஆண்டுக்கான குளோப் கால்பந்து விருது ரொனால்டோவுக்கு


கால்பந்து முகவர்களுக்கான ஐரோப்பிய அசோசியேசன் சார்பில் வழங்கப்படும் 2017-ம் ஆண்டுக்கான குளோப் கால்பந்து விருது (Globe Soccer Awards 2017)  ரியல் மட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கால்பந்து முகவர்களுக்காக ஐரோப்பிய அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கழகங்களின் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் குளோப் கால்பந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

சிறந்த அணிக்கான விருதை ரியல் மட்ரிட் அணியும் சிறந்த பயிற்சியாளருக்கான விருதினை ஷிடேனும் பெற்றுள்ளனர். ரொனால்டோவின் சிறப்பான ஆட்டத்தால் ரியல் மட்ரிட் அணி லா லிகா, சம்பியன்ஸ் லீக் ஆகிய கிண்ணங்களை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.