சினிமா பிரதான செய்திகள்

ஒப்பாயாவாக தெலுங்கில் காலடி எடுத்து வைக்கும் விஜய்சேதுபதி

சிரஞ்சீவி – நயன்தாரா  நடிப்பில் தெலுங்கில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் சயீரா நரசிம்மரெட்டி திரைப்படத்தில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கில் விஜய்சேதுபதி அறிமுகம் ஆகிறார்.

இந்தநிலையில் இந்தப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளன. தமிழ், இந்தி, மலையாளத்திலும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி சயீரா நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்தின் வலதுகரமாக இருக்கும் ஒப்பாயா என்ற பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பாத்திரம் சிரஞ்சீவியுடன் பெரும்பாலான காட்சிகளில் நடிக்க வாய்ப்புள்ள பாத்திரம் என்பதனால் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் தனி இடத்தை பெற்றுக் கொடுக்கும் எனவும் இதன்மூலம் விஜய்சேதுபதிக்கு தெலுங்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.