பிரதான செய்திகள் விளையாட்டு

இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரை 3-0 என இங்கிலாந்து கைப்பற்றியுள்ளது


இலங்கைக்கதெரான 4 ஆவது போட்டியில் டக் வேர்த்- லூவிஸ் முறையில் 18 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, தொடரை 3-0 என வென்றுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகின்றது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் நான்காவது போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற நிலையில்; நாணயச்சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பனை தெரிவு செய்திருந்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 07 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதனையடுத்து 275 என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 27 ஓவர்கள் நிறைவில்132 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் மழையின் காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து இங்கிலாந்து அணி டக் வேர்த் லூவிஸ் முறைப்படி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி 3-0 என கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.