Home பிரதான செய்திகள் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி

by admin


மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெடடுக்களால் வெற்றியீட்டியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்துள்ள நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றது.

அந்தவகையில் இன்று நடைபெற முதலாவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பினை தெரிவு செய்தது. இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 322 ஓட்டங்களைப் பெற்றது.

இதனையடுத்து 323 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 42.1 வது ஓவரில் 326 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More