Home உலகம் அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடைப்பயணம்

அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக நடைப்பயணம்

by admin
Central American migrants walk along the highway near the border with Guatemala, as they continue their journey trying to reach the U.S., in Tapachula, Mexico October 21, 2018. REUTERS/Ueslei Marcelino


மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர் இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ மற்றும் கௌதாமாலாவிற்கிடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்த போதும் அவர்களில் சிலர் சட்டத்திற்கு முரணாக படகுகள் மூலம் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான கொண்டிரஸ் நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் வறுமை மற்றும் வன்முறை போன்றவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவே அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 2000 குடியேறிகள் இந்த பயணத்தில் இருப்பதாக அசோஸியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடதத்க்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More