பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் வீதம் கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரம் சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகினி;ற நிலையில் அண்மையில் பெண்கள் பாதுகாப்புடன் வாழ தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாக சர்வதேச அறிக்கை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்று, பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் தொல்லை குறித்து மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு 371 வழக்குகள் மட்டுமே இருந்ததாகவும், 2018-ம் ஆண்டு அது 14 ஆயிரத்து 866 உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பீடு சுமார் 3 ஆயிரத்து 907 சதவிகிதம் அதிகம் ஆகும். இந்த சதவிகிதம் வடமாநிலங்களில் குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் கணிசமாக உயர்ந்துள்ளது எனவும் தொடர்ந்து டெல்லி, அரியானா மாநிலங்களில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Add Comment