இலங்கை பிரதான செய்திகள்

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, சம்பந்தரின் இராஜதந்திரத்தாலையே தோற்கடிக்கப்பட்டது…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங் களால் கைவிடப்படவில்லை. தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் இராஜதந்தி ர நடவடிக்கைகளாலேயே கைவிடப்பட்டது.என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
வடமாகாணசபை யின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் அவர் கூறுகையில்,
அமைச்சர் சபை குழப்பங்கள் நடந்த பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் செல்வதற்காக நான் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதாக நான் அறிந்தேன்.  உடனேயே அனுராதபுரத்தில் இறங்கி உடனடியாக யாழ்ப்பாணம் வந்து முதலமைச்சர் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது என உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று ஆளுநரிடம் சமர்பித்தோம்.
முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தப்ப ட்டிருந்தால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தோற்றிருப்பார். அது எனக்கு நிச்சயமாக தெரியும்.  ஆனால் எதிர்கட்சி தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் என்னை தொலைபேசியில் பல தடவைகள் தொடர்பு கொண்டு பேசி அந்த பிரச்சினையை சுமுகமாக தீருங்கள். அவ்வாறு தீர்ப்பதற்கு உங்களால் முடியும் என கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனையும் என்னோடு இணைத்து முதலமைச்சருடன் பல தடவைகள் பேசி, சர்வமத தலைவர்களை சந்திக்க வைத்து அந்த பிரச்சினையை சுமுகமாக தீர்த்துவைத்தோம்.  முதலமைச்சருக்கு ஆதரவாகமக்கள் குறிப்பாக இளைஞர்கள் போராட்டம் நடாத்தியது உண்மை. ஆனால் அதனால்தான் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றதாக நான் ஒருபோதும் கூறப்போவதில்லை.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மேற்கொண்டிருந்த இராஜதந்திர நடவடிக்கையாலையே  அது தோல்வியடைந்தது.  இதேசமயம் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்க சிலர் முயற்சித்தார்கள்.  நான் அப்போது கூறினேன் நிச்சயமாக நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கும். அவை தலைவர் அதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். ஆகவே அதனை கைவிடுங்கள் என கேட்டு நிறுத்தினேன் என்றார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 12 other subscribers