Home இந்தியா காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு

by admin


காஞ்சீபுரத்தில் தீபாவளி விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.  காஞ்சீபுரம் நாகலூத்துமேட்டில் வசித்து வரும் மத்தின்பாய் என்பவர் மொத்த விலைக்கு பட்டாசுகளை வாங்கி அவற்றினை சில்லறை விற்பனைக்காக வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்துள்ளார்.

அவை அனைத்தும் அனுமதி இல்லாமல் தயாரிக்கப்படும் நாட்டு வெடி வகையை சேர்ந்த பட்டாசுகள் என தெரிவிக்கப்படும் நிலையில் நேற்றையதினம் தாஹிராபானு என்பவரும் அவரது மகனும் பட்டாசுகளை சில்லரை விற்பனைக்கு ஏற்றவகையில் பிரித்து சிறிய பாக்கெட்டுகளாக அடைத்துக் கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் சரமாரியாக வெடித்து சிதறின.

இதில் தாஹிராபானுவும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதுடன் அயல்வீட்டின் சுவர் வெடித்து விழுந்ததால் இருவரும் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் ; அனுமதி இல்லாமல் நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து மத்தின்பாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More