இந்தியா பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தது சரியானது…

தமிழகத்தில் டிடிவி ஆதரவாளர்களான 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்தது செல்லுபடியாகும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை உயர் நீதிமன்றம் மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.

இதனையடுத்து புதிய நீதிபதி சத்யநாராயணன் கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்து கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி விசாரணையை தொடங்கினார்.  அரசுத் தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை ஓகஸ்ட் 31-ம்  திகதி  நிறைவு செய்தார். இத்துடன், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு வழங்கினார். அப்போது, இதற்கு முன்பு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும் வழங்கிய தீர்ப்பை பரிசீலிக்கவில்லை என்றும், தான் தனியாக ஒரு தீர்ப்பை வழங்குவதாகவும் கூறினார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்ததற்காக 18 சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லுபடியாகும்  என தீர்பளித்த நீதிபதி சத்தியநாராயணன். தகுதிநீக்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.  எனவே, இந்த தீர்ப்பை எதிர்த்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்களும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று காலை :

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதி நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதிய நீதிபதி கடந்த மாதம் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த 3-வது நீதிபதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பை திகதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கு தொடர் தீர்ப்பு மூன்றாவது நீதிபதி சத்திய நாராயணனினால் இன்று காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.