உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்க ஆயுதங்களுக்கு இடம் அளிக்கும் நாடுகள் ரஸ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும்


அமெரிக்காவின் ஆயுதங்களை நிலை நிறுத்த ஐரோப்பிய நாடுகள் இடம் அளித்தால், ரஸ்யா அதற்கு ஏற்ற வகையில் பதில் அளிக்கும் என்று ரஸ்;ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அவ்வாறு அமெரிக்க ஆயுதங்களுக்கு இடம் அளிக்கும் நாடுகள் ரஸ்யாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1987இல் கையெழுத்தாகியிருந்த ரஸ்யாவுடனான அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றில் இருந்து அமெரிக்கா அண்மையில் விலகியிருந்தது . இதேவேளை பனிப்போர் காலத்துக்குப் பின் தங்கள் மிகப்பெரிய ராணுவப் பயிற்சியை நேட்டோ நாடுகளும் ஆரம்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.