இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லயன் ஏயார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஜெடி – 610 என்ற இந்த விமானம் குழந்தைகள் உட்பட 188 பயணிகளுடன் பயணித்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
ஜகார்த்தாவில் இருந்து பன்ங்கால் பினாங் நகரத்தை நோக்கி பயணித்த இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கடலில் விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை விபத்துக்குள்ளான விமானத்தின் இருக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் ஜாவா கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Add Comment