Home இந்தியா உலகிலேயே மிக உயரமான சிலை திறந்து வைப்பு – எதிராக போராடிய பழங்குடி மக்கள் கைது

உலகிலேயே மிக உயரமான சிலை திறந்து வைப்பு – எதிராக போராடிய பழங்குடி மக்கள் கைது

by admin


உலகிலேயே மிக உயரமான சிலையான, சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் முதலாவது உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் இவ்வாறு மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

182 மீற்றர் உயரம் கொண்ட இந்த சிலை உலகிலேயே மிக உயரமான சிலையாக கருதப்படுகிறது.  சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி, இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.  இதேவேளை இந்த சிலையின் பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கு எதிராக போராடிய பழங்குடி மக்களை காவல்துறையினர் தடுத்து வைத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பழங்குடியினர் முழு கடை அடைப்புக்கு அறிவிப்பு விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More