இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – வடக்கில் ஒரு மாதத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,மாவட்டங்களில்   கடந்த 16 வருடங்களான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் ஹலோ ட்ரஸ்ட் நிறுவனமானது கடந்த மாதம் மாத்திரம் 171475 சதுர  மீற்றர் பரப்பளவில்  கண்ணிவெடிகளை அகற்றியுள்ளது. மனித வலு மூலம் 120365 சதுர மீற்றர் பரப்பளவிலும், இயந்திர வலு மூலம் 51110 சதுர மீற்றர் பரப்பளவிலும் கண்ணி வெடிகள அகற்றப்பட்டுள்ளது
 பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மனிதாவிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமானஹலோ ட்ரஸ்ட்  இலங்கை உட்பட 23 நாடுகளில் தனது கண்ணிவெடி அகற்ரல் செயற்பாட்டை செய்து வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக இலங்கையில் குறிப்பாக வடமாகாணத்தில்  கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது.
 கனடா அமரிக்கா யப்பான் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் நிதி பங்களிப்பில் புதிய தொழில் நுட்ப முறைகளை கையாண்டு கண்ணிவெடி அகற்றி வருகிறது. வடமாகாணத்தை சேர்ந்த 452 ஆண் 296 பெண்களுமாக மொத்தமாக 748 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இதன் அடிப்படையில் கடந்த மாதத்தில் மாத்திரம்
மனித வலு    120365 ச.மீ (சதுர மீற்ரர்)
இயந்திர வலு 51110 ச.மீ
யுத்த பிரதேச துப்பரவு 22750 ச.மீ
தனிமனித மிதிவெடி   1498
வாகன எதிர்பு மிதிவெடி     01
வெடிக்காத வெடிபொருள்          209
ஆபத்து குறைந்த வெடிபொருள்      14
சிறிய வகை துப்பாக்கி ரவைகள்    3000 என்பன மீட்கப்பட்டுள்ளன.
மேலும்  கடந்த 16 வருடங்களில் மாத்திரம்
மனித வலு    12948807 ச.மீ (சதுர மீற்ரர்)
இயந்திர வலு 2345968  ச.மீ
யுத்த பிரதேச துப்பரவு 16537இ840 ச.மீ
தனிமனித மிதிவெடி 231981
வாகன எதிர்பு மிதிவெடி 998
வெடிக்காத வெடிபொருள்          28395
ஆபத்து குறைந்த வெடிபொருள்      45969
சிறிய வகை துப்பாக்கி ரவைகள்    744794  என்பனவும்  ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தினரால் மீட்கப்பட்டுள்ளன. 2020 கண்ணிவெடி அற்ற நாடு’ என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக  கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன

வடக்கில் ஒரு மாதத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன

Nov 1, 2018 @ 02:57

வடக்கில் மூன்று மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் தமது நிறவனத்தால் அகற்றப்பட்டு உள்ளதாக ஹலோரெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 16 வருட காலமாக வெடி பொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்ற குறித்த நிறுவனம் தற்போது வடக்கில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் குறித்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இருந்து ஒரு மாதத்தில் ஆயிரத்து 498 மிதிவெடிகள், ஒரு வாகன எதிர்ப்பு மிதிவெடி , 209 வெடிக்காத வெடி பொருட்கள் , 14 ஆபத்து குறைந்த வெடி பொருட்கள் , மூவாயிரம் துப்பாக்கி ரவைகள் என்பவற்றை தாம் மீட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் வெடி பொருட்களை அகற்ற மனித வலுவையும், இயந்திர வலுவையும் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.