இலங்கை பிரதான செய்திகள்

நான் இந்தக் கதிரையில் இருக்கும் வரை வடக்கு – கிழக்கு இணைப்பு – சமஸ்டி இல்லை


ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால், ஜனாதிபதி கதிரையில் ஒரு மணிநேரமேனும் தான் இருக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிவிலகி வீதியில் இறங்கி மகிந்­த­வுடன் இணைந்து செயற்­படத் தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கை மீண்டும் இணைப்பதற்கு, தான் இந்த ஜனாதிபதி கதிரையில் இருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர் தான் . இந்தக் கதிரையில் இருக்கும் வரையிலும் வடக்கு, கிழக்கை மீண்டும் இணைக்கப்போவதும் இல்லை என்பதுடன் சமஸ்டியை வழங்கப் போவதும் இல்லை எனவும் அவ்விரண்டையும் அடையவேண்டுமாயின் முதலில் தன்னை கொலைச் செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் அமைப்­பா­ளர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக இடம்­பெற்ற ஆட்­சியில் பெறு­ம­தி­யில்­லாத நிலை­யி­லேயே தான் இருந்ததாகவும் 2015 ஆம் ஆண்டு மஹிந்­தவின் ஆட்­சி­யி­லி­ருந்து எவ்­வாறு அதி­ருப்­தி­யுடன் வில­கி­னேனோ அத­னை­விட அதி­க­மான அதி­ருப்­தி­யு­ட­னேயே தற்­போது அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யே­றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.