பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கெதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டி – பாகிஸ்தான் 2 ஓட்டங்களால் வெற்றி


அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியினை 2 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது. இருநாடுகளுக்குமிடையில் இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது.

அந்தவகையில் நேற்று நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ஓட்ட்ங்களைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து, 149 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 14 ஓட்டங்களை மாத்திரமே பெற்றமையில் 2 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers