இலங்கை பிரதான செய்திகள்

2ஆம் இணைப்பு – சர்வதேச அழுத்தங்களும் கோத்தபாய ரணில் சந்திப்பும் –

தம்மிடமே பெரும்பான்மை என பரஸபரம் பிரஸ்தபிப்பு…


முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது சர்வதேச சமூகத்திடமிருந்து எழக்கூடிய எதிர்ப்பினை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய்ந்துள்ளனர்.

ரணில்விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில் மகிந்தராஜபக்சவின் பிரதிநிதியாக கோத்தபாய ராஜபக்ச ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார். இலங்கையில் காணப்படும் குழப்பகரமான நிலவரம் காரணமாக சர்வதேச சமூகத்திடமிருந்து எதிர்பாராமல் எழக்கூடிய எதிர்மறையான குழப்பமான உணர்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் மகிந்தராஜபக்ஸவுக்கும் அவசியமான பெரும்பான்மையுள்ளது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தையும் பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தையும் பாதுகாப்பதற்கான மக்களின் ஆதரவு தனக்குள்ளது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க தான் அதனை நிரூபிக்க தயார் என குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பு மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றது வேறு எவரும் பிரசன்னமாகி இருக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

கோத்தா – ரணில் சந்திப்பு….

Nov 2, 2018 @ 02:56

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேறறு மாலை அலரிமாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இடம்பெற்றுள்ளது. ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின்பேரில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறினால் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பிலும்; கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.