பிரதான செய்திகள் விளையாட்டு

அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு


பாகிஸ்தான் அணித் தலைவராக சில காலம் கடமையாற்றிய அசார் அலி ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு நியூஸிலாந்து தொடருக்குப் பின்னர் அசார் அலி அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியில் ஒருநாள் போட்டிகளில் அபாரமான வீரர்கள் விளையாடி வருவதனால தனது தேவை இருக்காது எனவும் டெஸ்ட் போட்டிகளில் இதே ஆற்றல், திறமையுடன் தொடர்ந்து கவனம் செலுத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுவரை 53 போட்டிகளில் விளையாடிய அசார் அலி, 1845 ஓட்டங்களை எடுத்துள்ளார் என்பதுடன் அவரது சராசரி 36.90. என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.