சினிமா பிரதான செய்திகள்

வரலட்சுமி , பால்ய நண்பர், மனதுக்கு நெருக்கமானவர், விஷால்

சண்டக்கோழி 2 படத்தின் வெற்றி சந்திப்பில் விஷாலிடம் எப்போது திருமணம் என்றும் உங்களது திருமணம் வரலட்சுமியுடனா என்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் கேட்டதற்கு விஷால் பதில் அளித்துள்ளார். லிங்குசாமியின் இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘சண்டக்கோழி 2’. விஷால் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும்  வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழை விட தெலுங்கில் இப்படத்தின் வசூல் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான வெற்றி சந்திப்பு ஆந்திராவில் நடைபெற்றது. இதில் விஷால் கலந்து கொண்டார். அப்போது ‘டெம்பர்’ தமிழ் மறு உருவாக்கமான ‘அயோக்யா’ படத்தில் நடித்து வருவது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு விஷால்   பதிலளித்தார்

இதன்போது, ‘வரலட்சுமியுடன் தான் திருமணமா? எப்போது?’ என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு, “வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர் சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன்” என்று விஷால் பதிலளித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers