பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்துக்கெதிரான 2வது இருபதுக்கு 20 – 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்


துபாயில் இன்று நடைபெற்ற நியூசிலாந்துக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியது.

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு -20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகின்ற நிலையில் முதல் போட்டியில் 2 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற 2வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்று துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 154 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளதனையடுத்து 2-0 என தொடரை கைப்பற்றியுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.