இலங்கை பிரதான செய்திகள்

மைத்திரியின் செயல்கள் வன்முறைக்கு வித்திடக்கூடும் – ஐ.நாவின் தலையீடு அவசியம் :

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இந்த விடயத்தில் ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் நெருக்கடி நிலவரங்கள் குறித்து தனது டுவிட்டர் பதிவில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்மூடித்தனமான செயல்கள் இலங்கையில் உறுதியற்ற வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளமையால் எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையிலும், பிராந்தியத்திலும் உள்ள தலைவர்களுடன் இணைந்து, நெருக்கடியைத் தீர்க்க ஐ.நா அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் ஆபத்துகள் தெளிவாக உள்ளதாகவும் வன்முறைக்கு சாத்தியம் உள்ளது எனவும் சமந்தா கூறியுள்ளார்.

ராஜபக்ஸ மீண்டும் பதவிக்கு வருவதால், இன நல்லிணக்க முயற்சிகள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ள அவர் அமெரிக்காவின் இராஜதந்திரம் எங்கே என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாற நிலமைகள் இடம்பெற்றால் உதவிகள் இடைநிறுத்தப்படுவதோடு, தடைகள் இலக்குவைக்கப்படும் என்பதை இலங்கை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • “வன்முறையை உருவாக்கும் சாத்தியம் உள்ளது. இதனால் இன நல்லிணக்க முயற்சிகள் முடிவுக்கு வரும். இதை மாற்றி அமைக்க இலங்கையிலும், பிராந்தியத்திலும் உள்ள தலைவர்கள் இணைய வேண்டும். ஐ.நா தலையிட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அமெரிக்காவின் இராஜதந்திரம் வேண்டும். தேவைப்பட்டால் தடைகள் இலக்கு வைக்கப்பட வேண்டும் மற்றும் உதவிகள் இடைநிறுத்தப்பட வேண்டும்.” என்று ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் மிகவும் சரியாக் கூறியுள்ளார். இவை நடந்தால் தமிழர்களின் அரசியலத் தீர்வு இலகுவாகும்.