புதுக்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விசேட காவல்துறை அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு பாதுகாப்பைப் பெற்றுத் தருமாறு சட்ட மா அதிபர், காவல்துறை மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்மைய இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் தளபதி சிரேஷ்ட காவல்துறை மா அதிபர் எம்.லதீப் தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் மற்றும் முன்னாள் பிரதமரின் ஊழியர்கள் சிலர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதனாலேயே இவ்வாறு சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment