இலங்கை பிரதான செய்திகள்

அறிவிக்கப்பட்டபடி இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படும்


யுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு நடைபெறும் என மீள்குடியேற்றம் புனரமைப்பு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் விவகார அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி காலை 9 மணிக்கு மாவட்ட செயலகத்தில் 320 பேருக்கும் கிளிநொச்சியில் பகல் 10.30 மணிக்கு கூட்டுறவு மண்டபத்தில் 300 பேருக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் 170 பேருக்குமான இழப்பீட்டுக் காசோலைகள் 2 மணிக்கும் திட்டமிட்டபடி வழங்கி வைக்கப்படவுள்ளது.

எனவே காசோலைகளைப் பெற்றுக்கொள்ள அழைக்கப்பட்டுள்ள பயனாளிகள் குறித்த நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்திற்கு வருகைதந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.